புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும். இதில் 2023ம் ஆண்டுக்கான உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை மே 22ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோடை விடுமுறை காலத்தில் அவசர மற்றும் முக்கியமான வழக்குகளில் ஜாமீன் கோரும் மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் தற்போது தொடங்கவுள்ள இந்த ஆண்டுக்கான உச்ச நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை அமர்வில் சுமார் 300 புதிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தெரிவித்துள்ளார்.இவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடியான முடிவுகள் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post கோடை விடுமுறையில் 300 வழக்குகள் விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.
