×

திருவாரூரில் கலைஞர் கோட்டகம் ஜூன் 15ல் நிதிஷ்குமார் திறக்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருவாரூர்: திருவாரூரில் கலைஞர் கோட்டகத்தை ஜூன் 15ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். திருவாரூரில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு நேற்று அளித்த பேட்டி: திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில் மாநிலம் முழுவதும் கடந்த ஆட்சியாளர்கள் மூலம் கிடப்பில் போடப்பட்டிருந்த பல்வேறு திட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டு நடைபெற்று வருகின்றன. கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3ம் தேதி வட சென்னையில் திமுக சார்பில் கொண்டாடப்பட உள்ளது. 5ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.

திருவாரூரில் தயாளு அம்மையார் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டகத்தை 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். கள்ள சாராய விவகாரத்தை அரசியலாக பார்க்க வேண்டாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனை அரசியலாக பார்ப்பவர்கள் மற்றும் மாற்று கருத்து தெரிவிப்பவர்கள் சிறுமுகத்தைதான் காண்பிக்குமே தவிர உயர்ந்த உள்ளத்தை காட்டாது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையை பின்பற்றி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பத்திரிகைகள் கருத்து தெரிவித்தன. இந்த வெற்றி என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருவாரூரில் கலைஞர் கோட்டகம் ஜூன் 15ல் நிதிஷ்குமார் திறக்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Artist Fort in ,Thiruvarur ,Nitishkumar ,Minister A. Etb. Velu ,Tiruvarur ,Chief Minister ,Bihar ,Artist Fort ,Minister ,A. Etb ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்