×

வண்டலூர் அருகே மகளுடன் கருப்பட்டி காபி குடித்த ஹைடன்

சென்னை: வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஹைடன் மற்றும் அவரது மகள் கிரேஸி ஹைடன் ஆகியோர் கருப்பட்டி காபி மற்றும் சிற்றுண்டி அருந்தி ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டனர். சென்னை, வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் அல்வா மற்றும் கருப்பட்டி காபி கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹைடன் மற்றும் அவரது மகள் கிரேஸி ஹைடன் ஆகியோர் காபி அருந்த நேற்று காலை வந்தனர். அப்போது தமிழர்களின் பாரம்பரிய கருப்பட்டி காபி மற்றும் கருப்பட்டியால் செய்யப்பட்ட சிற்றுண்டியை அவர்கள் இருவரும் அருந்தினர். இது தொடர்பாக ஹைடன் மகள் கிரேஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவை நான் சாப்பிட்டேன் என்று பெருமையுடன் அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஒயிட்சுகர் காபியை மட்டுமே நாங்கள் அருந்துவோம். அதற்கு மாற்றாக இந்த கருப்பட்டி காபி மிக அருமையாக இருக்கிறது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். அந்த கடையில் ஹைடன் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும், அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

The post வண்டலூர் அருகே மகளுடன் கருப்பட்டி காபி குடித்த ஹைடன் appeared first on Dinakaran.

Tags : Haidan ,Vandalur ,Chennai ,Australia ,Hyden ,Crazy Hyden ,Vanthalur ,
× RELATED மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 19ஆம் தேதி வண்டலூர் பூங்கா மூடப்படும்..!!