×

சமையல் காஸ் சிலிண்டர் பொருத்திய போது ஆம்னி வேன் தீ பிடித்து எரிந்தது: வியாபாரி உயிர் தப்பினார்

அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் பகுதியில் விதிமீறி ஆம்னி வேனில் சமையல் காஸ் சிலிண்டர் பொருத்திய போது ஆம்னி வேன் தீ பற்றி எரிந்தது. இதில் வியாபாரி உயிர் தப்பினார்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள மூன்றோடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (60). விசைத்தறி வைத்து நெசவு செய்து வரும் இவர், நேற்று விசைத்தறியில் நெய்த துண்டுகளை தனது ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டு அந்தியூர் வந்து விற்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். ஆம்னி வேனில் ஒலகடம் பகுதியில் சென்ற போது காஸ் இல்லாமல் நின்று விட்டது.

அப்போது வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய சமையல் காஸ் சிலிண்டரை சட்டவிரோதமாக எடுத்து வந்து காரிலிருந்த காஸ் சிலிண்டரை மாற்றி சமையல் காஸ் சிலிண்டரை ஆம்னி வேனில் பொருத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு ஆம்னி வேன் எரிய தொடங்கியது. இதில் ரங்கசாமிக்கு லேசான தீக்காயமும் ஏற்பட்டது. இத்தகலவறிந்த அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இவ்விபத்து குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சமையல் காஸ் சிலிண்டர் பொருத்திய போது ஆம்னி வேன் தீ பிடித்து எரிந்தது: வியாபாரி உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Anthiyur ,Oalagadam ,Antheur ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; 12 பேர் கைது