×

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு..!!

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை முன்கூட்டி பள்ளிகளுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. பாடப்புத்தகம் உள்ளிட்டவை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்து கடந்த மாத இறுதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள், இதர பொருட்களை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே அச்சிடப்பட்டு தயாராக உள்ள நோட்டு, புத்தகங்கள் மாவட்டந்தோறும் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கான புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் பை போன்ற இதர தேவையான பொருட்களை வழங்குவதற்கு அந்தெந்த சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், மாவட்ட அளவில் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள், இதர பொருட்களை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, பள்ளி திறக்கும் நாளுக்கு முன்பாகவே அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய வகையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

The post கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Education Department ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...