×

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற அமிதாப், அனுஷ்கா மீது போலீஸ் நடவடிக்கை

மும்பை: ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை நகர போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், அவ்வழியாக வந்த ஒருவரின் பைக்கில் சென்றார். ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்வதற்காக, அவர் அந்த பைக்கில் சென்றார். இதுதொடர்பான புகைப்படம் வைரலானது. அதேபோல் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, சாலை தடுப்புகளை கடப்பதற்காக தனது காரில் இருந்து இறங்கி பைக்கில் சென்றார்.

தொடர்ந்து அவ்வழியாக சென்ற ஒருவரின் பைக்கில் சென்றார். இவரது புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேற்கண்ட இரு பிரபலங்களின் புகைப்படங்கள் குறித்தும், அவர்கள் மீது மும்பை போலீஸ் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் பலர் கேள்வி எழுப்பினர். அதையடுத்து மும்பை காவல் துறை வௌியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இரு பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளனர்.

The post ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற அமிதாப், அனுஷ்கா மீது போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Amitab ,Anushka ,Mumbai ,Amitabh Bachchan ,Anushka Sharma ,
× RELATED சென்னை, மும்பையில் ₹45 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி