×

கொச்சி அருகே ரூ.25,000 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா?..என்.ஐ.ஏ. விசாரிக்க முடிவு..!!

கொச்சி: கொச்சி அருகே 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கைது செய்யப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த நபரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை திட்டமிட்டுள்ளது. கேரளாவில் கொச்சி கடற்பரப்பில் சமீபத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த கப்பலை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். கப்பலில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியதில் மெத்தப்பட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

அதன் மதிப்பு 25 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருட்களை கடத்தியவர்களில் 6 பேர் இரண்டு படகுகளில் தப்பியோடிவிட்ட நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஜுவர் என்பவர் மட்டும் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முதலில் அவர் தன்னை ஈரான் நாட்டை சேர்ந்தவர் என்று தெரிவித்திருந்தார். விசாரணையில் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பது உறுதியானது.

முதற்கட்ட விசாரணையில் கப்பலில் போதை பொருட்களை கடத்தி வந்து கடற்பரப்பின் ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு சிறிய படகுகள் வாயிலாக அவற்றை விநியோகித்தது தெரியவந்தது. இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதால் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல ஜுவரை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு வாரியம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

The post கொச்சி அருகே ரூ.25,000 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா?..என்.ஐ.ஏ. விசாரிக்க முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Kochi ,NIA ,Dinakaran ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...