×

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது: 2 பேருக்கு வலைவீச்சு

திருத்தணி: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமி, அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் மாணவியை பெற்றோர், ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியதால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மாணவியிடம் விசாரித்தனர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த ஜீவரத்தினம் (எ) ஜீவா (21) என்பவர் தான் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பதும் இதன்காரணமாக மாணவி கர்ப்பமானதாகவும் தெரியவந்தது.

மேலும் மாணவியுடன் ஜாலியாக இருப்பதை ஜீவரத்தினத்தின் நண்பர்கள் 2 பேர் புகைப்படம் எடுத்து வைத்ததாக தெரிவித்துள்ளனர்.இதுசம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து ஜீவரத்தினம் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சின்னராசு, சத்யா ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.இந்தநிலையில் மாணவியை கர்ப்பமாக்கிய ஜீவரத்தினத்தை சப் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி கைது செய்து விசாரித்தார். இதன்பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். சின்ராசு, சத்யா ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது: 2 பேருக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Pauxo ,Thiruthani ,Thiruvallur District ,
× RELATED கனகம்மாசத்திரம் அருகே திடீரென சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான மரம்