×

பாஜகவை தோற்கடிப்பதே ஒற்றை இலக்கு – சீதாராம் யெச்சூரி பேட்டி..!!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்தார். விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டியலின, பழங்குடியினர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்தித்து பேசினார்.

இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்பட தயாராக உள்ள கட்சிகள் இணைந்து செயல்படுவோம். ஒவ்வொரு மாநிலத்திலும் மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

The post பாஜகவை தோற்கடிப்பதே ஒற்றை இலக்கு – சீதாராம் யெச்சூரி பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Sitaram Yethuri ,Chennai ,Chief Minister ,G.K. Sitaram Yechury ,Stalin ,Vilapuram ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...