×

குட்டிக் குட்டி மருத்துவக் குறிப்புகள்

* சேற்றுப்புண்ணுக்கு கடுக்காயை அரைத்து தடவி வர குணம் தெரியும்.
* பல்வலி குணமாக ஒரு வெற்றிலை, இரண்டு கிராம்பு சேர்த்து மென்று வலியுள்ள பல்லில் ஒதுக்கி வைத்துக் கொண்டால் குணமாகும்.
*வாய் நாற்றம் போக வெந்நீரில் எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
*வாய்ப் புண் குணமாக சிறிது உப்பு கலந்த மோரினை வாயில் சிறிது நேரம் வைத்துக் கொண்டு துப்ப வேண்டும். ஒரு வாரம் இப்படி செய்ய வாய்ப் புண் குணமாகும்.
*இருமல் குணமாக துளசிச்சாறு தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட குணமாகும்.
*வயிற்றுவலி நீங்க நீரில் சிறிது சுக்கு, பனங்கற்கண்டு கொதிக்க வைத்து சாப்பிட வேண்டும்.
*மலச்சிக்கல் குணமாக இரவு தூங்குவதற்கு முன் இரண்டு பேரீச்சம்பழம், ஆறு உலர் திராட்சைப் பழம் நீரில் இரவு போட்டு வைத்து, காலையில் நீருடன் பருக வேண்டும்.
*வாயுக் கோளாறு நீங்க மிளகைப் பொடி செய்து பெருங்காயத்தூள் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து 1 டீஸ்பூன் சாப்பிடலாம்.
*தலைவலி குணமாக மிளகுப்பொடியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
*தலைச்சுற்றல் நிற்க பச்சை இஞ்சிச் சாறு, தேன் கலந்து ெதாடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
*தலை பாரம் குறைய நல்லெண்ணெயில் தும்பைப் பூவைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர குணமாகும்.
*இரத்த அழுத்தம் கட்டுப்பட காலை, மாலை இரு வேளையும் ½ மூடி எலுமிச்சம் பழச் சாறு 2 அவுன்ஸ் எடுத்து வெந்நீரில் சேர்த்து 2 தேக்கரண்டி தேனுடன் சாப்பிட்டு வர வேண்டும்.
*தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலம் பெறும்.
*கண் பார்வை தெளிவாக துளசியை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வரலாம்.
*தொப்பைக் குறைய சுரைக்காயை வாரம் 2 முறை சாப்பிட வேண்டும்.
*பருக்கள் மறைய ஜாதிக்காய்,சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தடவ குணமாகும்.
*தொண்டை கரகரப்பு நீங்க சிறிது புழுங்கல் அரிசியுடன் 10 மிளகு சேர்த்து வாயில் அடக்கி, சாற்றினை உறிஞ்சினால் குணமாகும்.
*இரத்த மூலத்திற்கு வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வரலாம்.
*காய்ச்சலுடனான வாந்தி நிற்க துளசிச்சாறு கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
– எஸ். விஜயலஷ்மி,

The post குட்டிக் குட்டி மருத்துவக் குறிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Kutty Cutty ,Tips ,Kiddy ,Dinakaran ,
× RELATED கோடையில் மின்சாரத்தை மிச்சம் செய்து...