×

யோகி வேண்டாம் உபி.யில் யோக்கியமான ஆட்சி தான் வேண்டும்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

லக்னோ: ‘உத்தர பிரதேசத்தில் யோகி அரசு வேண்டாம், யோக்கியர்களின் ஆட்சிதான் வேண்டும்,’ என்று பாஜ.வை அகிலேஷ் யாதவ் தாக்கி பேசியுள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு ஆரம்பத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, கட்சித் தாவல்கள் அதிகமாகி இருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.எஸ்.குஸ்வாகா, முன்னாள் எம்பி கதிர்ரானா ஆகியோர் அகிலேஷ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் நேற்று இணைந்தனர். பின்னர், அகிலேஷ் கூறியதாவது:  ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது உபி.யில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முலாயம் சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். சமாஜ்வாடி கட்சியும் அதையே விரும்புகிறது. அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 தாண்டி விட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் விைலயும் அதிகரித்துள்ளது. உபி.யில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 400 இடங்களில் வெற்றி பெறும். மாநில பாஜ அரசும், ஒன்றிய அரசும் விவசாயிகள் விரோத ஆட்சி நடத்தி வருகின்றன. அது பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி விட்டது. வேலைவாய்ப்பு என்பதே நாட்டில் இல்லை. உத்தர பிரதேச மக்கள் யோக்கியர்களின் ஆட்சியைதான் எதிர்பார்க்கிறார்கள்; யோகி ஆட்சியை அல்ல. இவ்வாறு அவர் கூறினார். …

The post யோகி வேண்டாம் உபி.யில் யோக்கியமான ஆட்சி தான் வேண்டும்: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Yogis ,UP ,Akhilesh Yadav ,Lucknow ,Uttar Pradesh ,Yogi government ,Yogyakarta government ,BJP ,
× RELATED டெல்லி அமைச்சர் அதிஷியை சந்தித்து நலம் விசாரித்தார் அகிலேஷ் யாதவ்