×

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மறைமுகமாக தடை விதிக்கவில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்

டெல்லி: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால், திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கேரள பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் திட்டமிடப்பட்டு இணைக்கப்படுகின்றனர் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிப்பதாக மேற்கு வங்க அரசு தெரிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இப்படத்தை வெளியிடப்போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இம்முடிவுகளுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 12-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மேற்கு வங்க மாநிலத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த திரைப்படம் குறித்து மே 17-க்குள் மேற்குவங்கம், தமிழ்நாடு அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மறைமுகமாக தடை விதித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதை திரையரங்குகள் நிறுத்துவிட்டன. கடும் விமர்சனம், படத்தை பார்க்க யாரும் வராதது, பரிச்சயமில்லாத நடிகர்கள் போன்ற காரணங்களால் படம் திரைப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதில் கூறியுள்ளது.

The post தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மறைமுகமாக தடை விதிக்கவில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Supreme Court ,Delhi ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...