×

சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதியின்றி பூஜை: சமூக வலைதளங்களில் பரவிய காணொளியால் பரபரப்பு..!!

கேரளா: சபரி மலையில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவதாக நம்பப்படும் பொன்னம்பல மேட்டில் சிலர் பூஜை செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சபாரிமையில் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய மகரவிளக்கு பூஜையன்று சன்னிதானத்திற்கு எதிர்புறம் இருக்கக்கூடிய பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியானது காட்சியளிக்கும். மகர ஜோதியானது சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சி தருவதாக ஐதீகம் இருந்து வருகிறது.

இந்த காட்சிகளை காண்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதி அன்று சபரிமலையில் கூடுவர். மகர ஜோதி நடைபெறக்கூடிய பொன்னம்பல மேடு என்பது அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் யாரும் நுழையக்கூடாது என்ற தடையும் உள்ளது. அங்கு அதிக அளவில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதனாலும் அந்த பகுதி பாதுகாக்கப்பட வனப்பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொன்னம்பல மேடு இருக்க கூடிய மலை மீது அமர்ந்து பூஜை செய்யக்கூடிய காட்சிகளும், பூஜை நடைபெறும் போது அதன் பின்னணியில் இருந்து இடத்தை பற்றியும், எதிர்திசையில் இருக்கக்கூடிய சன்னிதானத்தை குறித்து விளக்கமும் ஒருவர் அளித்துக்கொண்டிருக்கும் காட்சியும். சமூக வலைத்தளங்களில் பரவி ஐயப்ப பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேரள இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார்.

The post சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதியின்றி பூஜை: சமூக வலைதளங்களில் பரவிய காணொளியால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Ponnambala ,Kerala ,Ponnambala hill ,Ayyappan ,Jyothi ,Sabari hill ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...