×

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்க திட்டம்: கிராம மக்கள், விவசாயிகள் 3 நாட்களாக போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடையூர் ஊராட்சிக்கு உட்பட புனல்காடு பகுதியில் உள்ள மலைக்குன்றை சமன்படுத்தியும், 2,000 ஏற்பட்ட அரியவகை மூலிகை மரங்களை அப்புறப்படுத்தும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் விவசாயம் முற்றிலும் அழிக்கப்படுவதோடு தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி விவசாயிகள், கிராம மக்கள் கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். போராட்டத்தில் புனல்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் போராட்ட களத்திலேயே கஞ்சி காய்ச்சி குடித்து வருகின்றனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்க திட்டம்: கிராம மக்கள், விவசாயிகள் 3 நாட்களாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvandamalai district ,Tiruvannamalai ,Punal forest ,Thiruvannamalai district ,Thiruvnamalai district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...