×

காங்கிரஸ் பலமாக இருக்கும் மாநிலங்களில் ஆதரவளிக்கத் தயார் என மம்தா கூறிய கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வரவேற்பு..!!

பெங்களூரு: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எங்கெல்லாம் பலமாக உள்ளதோ அங்கு காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். இதனை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வரவேற்றுள்ளார். மக்களவை தேர்தலில் தனித்தே போட்டி என்று கூறி வந்த மம்தா தனது நிலைப்பாட்டில் சற்றே மாற்றத்தை வெளிக்காட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் பேட்டியளித்த அவர்; மாநிலங்களில் வலிமையாக உள்ள கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார். காங்கிரஸ் வெற்றி பெற நினைக்கும் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவளிக்க தயார் என்று கூறியுள்ள மம்தா, தங்களுக்கும் இதே போன்று காங்கிரஸ் ஆதரவு தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இதனை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் வரவேற்றுள்ளார். மற்ற சில தலைவர்களோடு மம்தா பானர்ஜியும் நல்ல செய்தியுடன் வந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் கருத்து எதிர் கட்சிகளுக்கு நல்ல செய்தி என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸ் பலமாக இருக்கும் மாநிலங்களில் ஆதரவளிக்கத் தயார் என மம்தா கூறிய கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Congress ,President ,DK Sivakumar ,Mamata ,Congress ,Bengaluru ,Trinamool Congress ,West Bengal ,Congress party ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...