×

கோனார்க் கோயில் போல் அயோத்தியிலும் கருவறை: சூரிய கதிர்களின் வெளிச்சம் பாயும்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீராமநவமி அன்று சூரிய கதிர்கள் விழும் வகையில் கருவறை வடிவமைக்கப்பட இருப்பதாக ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்தார். இது குறித்து அறக்கட்டளையின் உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறுகையில், ‘‘ஒடிசாவில் 13வது நூற்றாண்டை சேர்ந்த கோனார்க் கோயிலில் சூரிய கதிர்கள் கருவறையில் விழுவது போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று ஒவ்வொரு ஸ்ரீராமநவமி தினத்திலும் அயோத்தி ராமர் கோயிலில் சூரிய கதிர்கள் விழும் வகையில் கருவறை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஞ்ஞானிகள், வானியியல் வல்லுனர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து வருகிறோம். மேலும், தேசிய கட்டிட கலை நிறுவனம், டெல்லி ஐஐடி, மும்பை, ரூர்கே ஐஐடி நிபுணர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறோம்,’’ என்றார். மற்றோரு மூத்த உறுப்பினர் கூறுகையில், ‘‘அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 2023 டிசம்பருக்குள் கோயில் கட்டப்பட்டு மக்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும். முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.  2ம் கட்ட பணிகள் நவம்பரில் நிறைவடையும். கோயில் அருகில் நதி இருப்பதால், நில அதிர்வு போன்ற பூகோள ரீதியான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன,’’ என்றார்….

The post கோனார்க் கோயில் போல் அயோத்தியிலும் கருவறை: சூரிய கதிர்களின் வெளிச்சம் பாயும் appeared first on Dinakaran.

Tags : Konark Temple ,New Delhi ,Sriramanavamy ,Ayoti Ramar ,Sriramanavami ,Sriram Genmabhumi ,Iothic Ecemetery ,
× RELATED இந்தியா ஓட்டளித்து விட்டது இந்தியா...