×

அரசு பள்ளி மாணவிகளிடம் ஜி பே மூலம் ரூ.18 ஆயிரம் மோசடி: கல்லூரியில் சேர காத்திருந்த மாணவிகளிடம் பணம் பறிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை பெற்று தருவதாக கூறி 4 மாணவிகளிடம் ஜி பே மூலம் ரூ.18,000 பெற்று மோசடி நடைபெற்றுள்ளது. பண்ருட்டியை அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து கல்லூரியில் சேர காத்திருந்த மாணவிகளிடமே இந்த மோசடி அரங்கேறியுள்ளது. மாணவி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் மாணவி படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஒப்புதல் ஆகியுள்ளதாக கூறியுள்ளார். உதவித்தொகையை பெற மாணவிகள் ரூ.3,500 வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொலைபேசி நபரின் பேச்சை நம்பிய மாணவி தனது தோழிகள் இருவருடன் இணைந்து 3 முறை வீதம் ரூ.10,000 வரை ஜி பே மூலம் செலுத்தியுள்ளார். பணத்தை செலுத்திய பின்னர் தொலைபேசியில் அவரை தொடர்பு கொண்ட போது அழைப்பு துண்டிக்கப்பட்டதால் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார். இதேபோல அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவியையும் தொடர்பு கொண்டுள்ள மர்மநபர் ரூ.8,000 பணத்தை பெற்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். கல்லூரியில் சேர கனவுகளுடன் காத்திருக்கும் மாணவிகளை குறிவைத்து ஆன்லைனில் நடைபெறும் மோசடியை விரைந்து ஒடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

The post அரசு பள்ளி மாணவிகளிடம் ஜி பே மூலம் ரூ.18 ஆயிரம் மோசடி: கல்லூரியில் சேர காத்திருந்த மாணவிகளிடம் பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : G Pay ,Cuddalore ,Pannruti ,G Bay ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு