×

அருப்புக்கோட்டை நகராட்சியில் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது

 

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நாளை நடக்கிறது
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அருப்புக்கோட்டை நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அதற்கான சமூக சுற்றுசூழல் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டம் குறித்து பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நாளை 17ம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பாரதிநகர் ஜவஹர் சங்கத்தெருவில் உள்ள நகராட்சி சமூதாய கூடத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நகர்மன்றத்தலைவர், நகராட்சி கமிஷனர், நகராட்சி பொறியாளர் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் தாங்கள் தவறாது கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார்.

The post அருப்புக்கோட்டை நகராட்சியில் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai Municipality ,Aruppukkottai ,Tamil Nadu ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி