×

வருசநாடு அருகே குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

வருசநாடு: வருசநாடு அருகே குழந்தை திருமண தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வருசநாடு ஊராட்சிக்குட்பட்ட தர்மராஜபுரம், வைகைநகர், வருசநாடு பகுதிகளில் குழந்தை திருமணத்தை தடுப்பதுடன், பெண் குழந்தைகளின் உரிமையை காப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது, இதில் தேனி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தலைமை தாங்கி பேசினார். தேனி மாவட்ட சைலன்ட் அமைப்பின் இயக்குனர் இபுராகிம், வைகை மகளிர் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் விஜயராணி, செயலாளர் செல்லமணி, பொருளாளர் முருகேஸ்வரி, மகளிர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், சைல்டுலைன் முனீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தேனி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளா கூறுகையில், கடமலை – மயிலை ஒன்றியத்தில் குழந்தை திருமணம் சில இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதை தடுப்பதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 முடிந்திருக்க வேண்டும் என்றாலும் மருத்துவ ரீதியாக 21 வயதுக்கு மேல் திருமணம் செய்வதே நல்லது. இந்த வயது பெண்களுக்கு, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி நன்றாக இருக்கும். எனவே குழந்தை திருமணத்தை ஆதரிப்பது மற்றும் நடத்த முயற்சிப்பது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றம் வாயிலாக உரிய தண்டனை வழங்கப்படும். இன்று பெண்களின் உயர்கல்விக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றை முறையாக பயன்படுத்தி பெண்களை வாழ்வில் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்றார்.

The post வருசநாடு அருகே குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Dharmarajapuram, Vaigainagar ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு மலையடிவார கிராமங்களில்...