×

10ம் வகுப்பு தேர்வில் செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீத தேர்ச்சி

 

காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி ஹர்சிதா 97.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விஜயகுமார் ராஜா 96 சதவீதம், ஸ்ரயா சிவக்குமார் 96 சதவீதம், கார்த்திக் பாலன் 95.5 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் ஒருவர், கணிதத்தில் 2 பேர், ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பாடத்தில் 7 பேர் என 10 பேர் 100க்கு 100 மார்க் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிகுழும தலைவர் குமரேசன், துணைத்தலைவர் அருண், நிர்வாக இயக்குநர்கள் சாந்திகுமரேசன், பிரித்திஅருண், முதல்வர் உஷாகுமாரி, ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், துணைமுதல்வர் பிரேமசித்ரா, தேன்மொழி உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர். பெற்றேர்கள் கூறுகையில், ‘‘பள்ளி மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டி வரும் பள்ளிக்குழும தலைவர், துணைத்தலைவர், முதல்வர், ஆசிரியர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளியின் சிறந்த முயற்சியாலேயே மாணவர்கள் சிறந்த மார்க் பெற முடிந்தது’’ என்றனர்.

The post 10ம் வகுப்பு தேர்வில் செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chettinad Public CBSE School ,Karaikudi ,Chettinadu Public CBSE School ,Dinakaran ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...