×

பேச்சியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

 

சாயல்குடி: கடலாடி அருகே உள்ள வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் மற்றும் கொண்டையுடைய அய்யனார் கோயிலில் 13ம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் வைகாசி மாத வருடாந்திர பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீப ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை யாகசாலை வளர்க்கப்பட்டு, சாமி விக்கிரங்களுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

பிறகு கடலாடி மங்களவிநாயகர் கோயிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் மற்றும் அய்யனார் உள்ளிட்ட காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தேவதை விக்கிரங்களுக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தனியங்கூட்டம் உள்ளிட் கிராம மக்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பேச்சியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் appeared first on Dinakaran.

Tags : Pachyamman temple ,Vaikasi ,Agni Chatti ,Vanappechiyamman ,Rakkachi Amman ,Kondadu Ayyanar temple ,Cuddaly ,Vaikasi Festival ,
× RELATED சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி