×

உசிலம்பட்டியில் ரூ.3.75 கோடியில் மாணவர் விடுதி திறப்பு

 

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மைதானம் அருகில் அரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் தாட்கோ நிதி மூலம் 3.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக அரசு மாணவர்கள் விடுதி கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. உசிலம்பட்டி வட்டாட்சியர் சுரேஷ் பிரடெரிக் கிளமென்ட் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், தாட்கோ செயற்பொறியாளர் சிதம்பர தானு, தனி வருவாய் அலுவலர் ராமச்சந்திரன், விடுதி காப்பாளர்கள் ராஜ்குமார், ராஜாத்தி மற்றும் விடுதி பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post உசிலம்பட்டியில் ரூ.3.75 கோடியில் மாணவர் விடுதி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Govt High School ,Government Adi Dravida Welfare Department ,TADCO ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி