
திருமங்கலம்: மதுரை தெற்கு மாவட்ட திமுக விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேற்று தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மதுரை தெற்கு மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணிக்கு புதிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் பரிந்துரையில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் விவரம்: தலைவராக கணேசன், துணைத்தலைவராக காசிமாயன், அணி அமைப்பாளராக வில்லூர் ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை அமைப்பாளர்களாக கருப்புசாமி, தங்கபாண்டியன், பாண்டியராஜன், செல்வமுனியாண்டி, செக்கானூரணி பாண்டியராஜன் ஆகியோர் திமுக தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாக நியமிக்கப்பட்ட அணி அமைப்பாளர் வில்லூர் ஞானசேகரன் தலைமையில் விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பினர் நேற்று திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறனை சந்தித்து சால்வை அணிவித்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாவட்ட செயலாளர், சிறப்பாக செயல்படும்படி கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் கொடி சந்திரசேகர், திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆலம்பட்டி சண்முகம், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், அணி அமைப்பாளா் சுரேஷ்குமார், திருமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான், பிரதிநிதி ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post மாவட்ட செயலாளரை சந்தித்த விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர்கள் appeared first on Dinakaran.