×

கரியசோலை மயானத்தில் காத்திருப்பு அறை அமைப்பு பணி தீவிரம்

 

பந்தலூர்: பந்தலூர் அருகே கரியசோலை பகுதியில் மயானத்திற்கு கான்கிரீட் சாலை மற்றும் காத்திருப்பு அறை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கரியசோலை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் இறந்தவர்களை புதைப்பதற்கு பயன்படுத்தி வரும் மயானத்திற்கு சாலை வசதி மற்றும் இறந்தவரை மயானத்திற்கு கொண்டு சென்று வைத்து சம்பிரதாய சடங்குகள் செய்வதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். மேலும் மழைக்காலங்களில் இறந்தவர்களை மயானத்திற்கு சுமந்து செல்லும்போது சேறும் சகதியுமான சாலையால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

மேலும் இறந்தவர்களின் உடலை வைத்து சடங்குகள் செய்வதற்கு முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கரியசோலை பொது மயானத்திற்கு சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.11.60 லட்சத்தில் மயானத்திற்கு கான்கிரீட் சாலை மற்றும் இறந்தவர்கள் உடலை வைத்து சடங்குகள் செய்வதற்கான காத்திருப்பு அறை கட்டும் பணி டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

The post கரியசோலை மயானத்தில் காத்திருப்பு அறை அமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kariacholai ,Pandalur ,Kariyacholai ,Dinakaran ,
× RELATED விளைநிலங்களில் ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சல்