×

நெல்லை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிராந்தன்குளம் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய வகுப்பறைகள்

நெல்லை, மே 16: நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 7வது வார்டு பிராந்தன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், பழுதடைந்த பள்ளி வகுப்பறைகள் அகற்றப்பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்பில் ஆன் லைன் டென்டர் விடப்பட்டு புதிய வகுப்பறைகள் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட உள்ளது. பிராந்தன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த மார்ச் மாதம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இப்பள்ளியில் 1 முதல் 8 ம் வகுப்புகள் வரை செயல்பட்டு வந்தது. சுற்று வட்டார பகுதியிலிருந்து சுமார் 175 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், 400 சதுர அடியில் தலைமையாசிரியர் அறை, வகுப்பறை, சமையலறை என கீழ் தளம் மற்றும் மேல் தளம் கொண்ட 6 புதிய அறைகள் கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு உத்தேசமாக மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராமசாமி, இளநிலை பொறியாளர் ஜெயகணபதி ஆகியோர் முன்னிலையில், பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் ேஜசிபி மூலம் அகற்றப்பட்டது.

The post நெல்லை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பிராந்தன்குளம் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய வகுப்பறைகள் appeared first on Dinakaran.

Tags : Brandhankulam Middle School ,Nellie Corporation ,Nellai ,Nellai Corporation Palayangottai ,Mandal 7th Ward ,Branthankulam Panchayat Union Middle School Corporation ,Commissioner ,Nellai Corporation ,Nellai Corporation Branthankulam Middle School ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி