×

ராசிபுரத்தில் பஞ்.,ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை

ராசிபுரம், மே 16: ராசிபுரம் ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில், நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அருள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம், வனிதா முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து- மாத்திரைகள் வழங்கினர். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

The post ராசிபுரத்தில் பஞ்.,ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Muthukalipatty ,
× RELATED ₹33 ஆயிரத்திற்கு பட்டுக்கூடு ஏலம்