×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர், மே 16: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து 5,000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3702 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 3088 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் 103.82 அடியிலிருந்து 103.90 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 69.98 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Mettur ,Cauvery ,Okenakal ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!