×

சூரியன் எப்.எம். பெருமையுடன் நடத்திய பாண்டி ராம் தங்க நகை மாளிகையின் ரிதம் தேவா இசை நிகழ்ச்சி

புதுச்சேரி, மே 16: புதுவையின் பல சிறப்புகளில் சூரியன் எப்.எம்-மும் ஒன்று. 2007ல் புதுச்சேரியில் முதன்முதலில் துவங்கப்பட்ட பண்பலை என்ற பெருமைக்குரிய சூரியன் எப்.எம். அன்று முதல் இன்று வரை பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரதார்களையும், நேயர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அந்தவகையில் காலம் சென்ற பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை அழைத்து கடலூரில் மாபெரும் ரிதம் இசை நிகழ்ச்சியை நடத்தியது. அதைதொடர்ந்து தற்போது, 5வது முறையாக இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா கலந்துகொண்ட ரிதம் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு புதுச்சேரி லாஸ்பேட் ஹெலிபேட் மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தேனிசை தென்றல் தேவா இசையமைத்து பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பல பாடல்களை பிரபலமான பாடகர்கள் பாடினர். அந்த வரிசையில் பாடகர்கள் ஹரிஹரன், எஸ்.பி.பி.சரண், காந்த் தேவா, பிரசன்னா, பாடகிகள் அனுராதா ராம், ஹரிணி, அல்கா அஜித், பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு காலத்தால் அழியாத, தேவா இசையில் வெளிவந்த பாடல்களான வந்தேன்டா பால்காரன், மல மல மல மருதமலை, கண்ணம்மா கண்ணம்மா, மனம் விரும்புதே, உன் பேர் சொல்ல ஆசை தான் போன்ற பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடினர்.

சூரியன் எப்.எம். பெருமையுடன் வழங்கும் ரிதம் இசை நிகழ்ச்சியை பாண்டி ராம் தங்கநகை மாளிகை, ராஜேந்திராஸ் மென் அண்ட் வுமன் ஸ்டோர்ஸ், கோல்ட் பிரியம் ரிபைன்ட் சன்பிளவர் ஆயில், தங்கமாளிகை, முத்து சில்க் ஹவுஸ், எல்ஜி ஷாப்பி, பிஎன்ஆர் லக்ஷ்மி சில்க்ஸ்,  ராஜா டிரேடர்ஸ், கலர்ஸ், முத்து சில்க் பிளாசா, ஆச்சாரியா கல்வி குழுமம், சர்வோ, நிப்பான் பெயிண்ட், கேசி ஓவர்சீஸ் எஜூகேஷன், ஸ்கந்தா ஹோம்ஸ், ஆருத்ரா ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல், சென்னை மீம்ஸ், லா கிராண்டி மலர், டார்லிங் பேக்கரி, நறுஞ்சுவை பிரியாணி, சென்னை மீம்ஸ், நிப்பான் பெயிண்ட் பிவிஆர், எல்பி ஸ்டூடியோஸ் மற்றும் தினகரன் நாளிதழ் ஆகியவை இணைந்து வழங்கியது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சாய் ஜெ சரவணன்குமார், சந்திர பிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், சம்பத், பிரகாஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வல்லவன், காவல்துறை ஐஜி சந்திரன், நடிகர் ஜெய், பாடகர் ஹரிச்சரன், பாடகி மாளவிகா சுந்தர் உள்ளிட்ட திரை பிரபலங்களும், புதுச்சேரி அரசின் உயர் அதிகாரிகளும் கலந்து
கொண்டு ரிதம் இசை நிகழ்ச்சியை சிறப்பித்தனர். எப்போதும் போல நேயர்களின் ஒத்துழைப்புடன் இந்த வருடமும் ரிதம் இசை நிகழ்ச்சி வெற்றிபெற்றது. எந்தவித இடையூறும் இல்லாமல் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post சூரியன் எப்.எம். பெருமையுடன் நடத்திய பாண்டி ராம் தங்க நகை மாளிகையின் ரிதம் தேவா இசை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sun F. MM ,Pandi Ram Gold Jewelry House Rhythm Deva ,Puducherry ,Sun F. Em ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு