×

விவாகரத்து பெற நாடு முழுக்க ஒரே சட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: விவாகரத்து பெறுவதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டத்தினை உருவாக்கக் கோரி கிரிக்கெட் வீரர் முகமது சமியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கிரிக்கெட் வீரர் முகமது சமி மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் முகமது சமியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில்,‘‘தலாக் உள்ளிட்ட முறையிலும், இன்னும் பல்வேறு வழிமுறைகளில் விவாகரத்து பெறும் நடைமுறை நாடு முழுவதும் இருந்து வருகிறது. தனது கணவரான முகமது சமி கூட எத்தகைய பழமைவாத விவாகரத்து முறையில் தான் என்னையும் விவாகரத்து செய்தார்.

இது பாலினம், மதம், வயது என எந்த வித்தியாசமும் பார்க்கப்படக் கூடாது என்ற அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 21 ஆகியவற்றை மீறும் வகையில் இருகிறது. எனவே நாடு முழுவதும் விவாகரத்து பெறுவதற்கு ஒரே மாதிரியான வழிமுறையை உருவாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,‘‘இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததோடு, இதுதொடர்பாக நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் இந்த மனுவும் இணைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

The post விவாகரத்து பெற நாடு முழுக்க ஒரே சட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Supreme ,New Delhi ,Mohammad Sami ,Supreme Court ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்