×

2 நாளில் 1,842 வழக்குகள் பதிவு கள்ளச்சாராயம் விற்ற 1558 பேர் கைது: தமிழக டிஜிபி தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் நடந்த சாராய வேட்டையில் 1,842 வழக்குகள் பதிவு செய்து 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,4493 ஐஎம்எப்எல் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. 218 லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம், ஏழு பைக்குகள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆண்டு இதுவரையில் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4,534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரை 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 1077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 2 நாளில் 1,842 வழக்குகள் பதிவு கள்ளச்சாராயம் விற்ற 1558 பேர் கைது: தமிழக டிஜிபி தகவல் appeared first on Dinakaran.

Tags : TN DGB ,Chennai ,Tamil Nadu ,TN DGB Info ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...