×

படப்பிடிப்பில் டம்மி குண்டுவெடிப்பு: இஷா தல்வார் காயம்

மும்பை: ‘தில்லு முல்லு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாவர் இஷா தல்வார். அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர் சமீபத்தில் வெளியான ‘ரன் பேபி ரன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர் ‘சாஸ், பஹு அவுர் பிளமிங்கோ’ என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரின் சண்டை காட்சிகள் கடற்கரை உப்பளத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு இஷா தல்வார் நடித்தார். அப்போது காட்சிக்காக டம்மி வெடிக்குண்டுகள் வெடிக்கப்பட்டது. இதில் இஷா தல்வருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. ‘‘தொடரின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பு உப்பளத்தில் நடந்தது.

நள்ளிரவு என்பதால் இருட்டாக இருந்தது. வெடிபொருள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. அப்போது திடீரென்று வெடித்ததில் எனது இடது கண்ணில் பலத்தக் காயம் ஏற்பட்டது. கண்ணைத் திறக்க முடியவில்லை. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். டாக்டர்கள் 3 நாட்கள் ஓவ்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள். ஓய்வுக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் இஷா தல்வார்.

The post படப்பிடிப்பில் டம்மி குண்டுவெடிப்பு: இஷா தல்வார் காயம் appeared first on Dinakaran.

Tags : Isha Talwar ,Mumbai ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு