×

சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற மேலும் 22 பேர் கைது: 38 டிக்கெட்டுகள், ரூ.62 ஆயிரம் பணம் பறிமுதல்

சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியை காண ரசிகர்கள் மைதானம் அருகே ஒன்று கூடினர். அப்போது டிக்கெட் கிடைக்காத ரசிகர்களிடையே சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரசிகர்களுக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்தாக நேற்று முன்தினம் 9 பேர் கைது செய்ப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 டிக்கெட், ரூ.13,350 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் ரசிகர்களிடம் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செயத்தாக தனித்தனியாக 11 வழக்குகள் பதிவு செய்து, திண்டிவனத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ்(22), சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜி(45), மண்ணடியை சேர்ந்த சாரதி(20), நாமக்கல் பகுதியை சேர்ந்த கிருபாகரன்(26), சேலத்தை சேர்ந்த கோகுல்ராஜ்(23), மணிகண்டன்(33), மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த அஜித்(24), ராயப்பேட்டையை சேர்ந்த வெங்டேஸ்வரலு(29), கோவிலம்பாக்கத்தை சேர்ந்த டேவிட் ஜேசன்(41), ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த ஷேக் ரசூல்(27), சவுகார்பேட்டையை சேர்ந்த குணால்(32), திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பார்த்திபன்(21), கோபாலபுரத்தை சேர்ந்த இப்திகர் ராயன்(20), திருச்சியை சேர்ந்த லஷ்மிஹரன்(27), வேப்பேரியை சேர்ந்த புகழேந்தி(26), கணேசன்(24), கோவை சேர்ந்த சிவக்குமார்(31), கோடம்பாக்கத்தை சேர்ந்த அரிகரன்(22), விருகம்பாக்கத்தை சேர்ந்த அக்சரா(23), மாதவரம் பகுதியை சேர்ந்த எஸ்.அரிகரன்(21), கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த யுவராஜ்(22), பரசுதீன்(21) ஆகிய 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 38 டிக்கெட்டுகள், ரூ.62,450 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற மேலும் 22 பேர் கைது: 38 டிக்கெட்டுகள், ரூ.62 ஆயிரம் பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : IPL ,Cheppakam Ground ,Chennai ,Chepakam M. PA ,Kolkata ,Chidambaram Ground ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில்...