×
Saravana Stores

தூத்துக்குடி அருகே மாதாவை கண்டெடுத்த 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கடலில் படகின் மேல் தூய அதிசய மாதா உருவம் வடிவமைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கண்டெடுத்த தூய அதிசய கடல் மாதாவின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு கடலில் படகின் மேல் மாதாவின் உருவத்தினை வடிவமைத்து ஊரே திரண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி மீனவர் பகுதியில் 1998ம் ஆண்டு மே மாதம் 13ம்தேதி சிலுவைப்பட்டி மற்றும் தாளமுத்து நகர் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வள்ளத்தில் சுண்ணாம்புக்கல் சேகரித்து கொண்டிருந்தபோது அதிசய கடல்மாதா சொரூபத்தின் ஒரு பகுதி தண்ணீருக்கு மேல் தெரிந்தது.

உடனே அதன் அருகே சென்ற மீனவர்கள் அதைத் தோண்டி எடுத்து பின்னர் 1999ம் ஆண்டு அக்டோபர் 13ம்தேதி வெள்ளப்பட்டி கடற்கரையில் அதற்கென கட்டப்பட்ட கெபியில் ஸ்தாபிக்கப்பட்டு வெள்ளப்பட்டி ஊர் பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். இந்நிலையில் தூய அதிசய கடல் மாதாவினை கண்டெடுத்த மே 13ம்தேதியை வெகு சிறப்பான விழாவாக ஊர் பொதுமக்களை ஒன்று கூடி சிறப்பு பிரார்த்தனை மற்றும் அசன பண்டிகையுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தூய அதிசய கடல்மாதா கண்டெடுக்கப்பட்டு 25 ஆண்டை முன்னிட்டு இந்த ஆண்டு அதனை வெள்ளி விழாவாக கொண்டாட முடிவு செய்தனர்.

தூய அதிசய கடல் மாதாவின் வெள்ளிவிழா ஆண்டிற்கான கொடியேற்றம் கடந்த 12ம்தேதி தொடங்கிய நிலையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இந்நிலையில் தூய அதிசய கடல் மாதாவை கடலில் கண்டெடுத்த மே 13ம்தேதியை முன்னிட்டு வெள்ளப்பட்டி கடலில் படகின் மேல் தூய அதிசய கடல்மாதாவின் உருவத்தினை வடிவமைத்துள்ளனர். இதனை வெள்ளப்பட்டி பங்குதந்தை வினித் ராஜா தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு நடைபெற்ற அசன பண்டிகையில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வெள்ளப்பட்டி கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்ற தூய அதிசய கடல்மாதாவின் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி அருகே மாதாவை கண்டெடுத்த 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கடலில் படகின் மேல் தூய அதிசய மாதா உருவம் வடிவமைப்பு appeared first on Dinakaran.

Tags : Pure ,Mada ,Thoothukudi ,Thuthukudi ,Pure Miracle Sea ,Matha ,Pure Miracle Mata ,Maada ,Dinakaran ,
× RELATED தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள்...