×
Saravana Stores

பாஜகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேச்சு

பாட்னா: பாஜகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு என பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிசத் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

பின்னர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் சந்தித்துப் பேசிய அவர், பிறகு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். கடந்த 10ம் தேதி புவனேஸ்வர் வந்த நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்; அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க-வை வீழ்த்துவது எளிது என்பது தான் கர்நாடக தேர்தல் முடிவு நமக்கு அளித்திருக்கும் செய்தி. அதனை வலியுறுத்திதான் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். பிரதமராக, முதல்வராக வருவதல்ல எங்களது நோக்கம். பா.ஜ.கவை வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு என கூறினார்.

The post பாஜகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Bihar ,Deputy Chief Minister ,Tejashwi Yadav ,Patna ,Tejaswi Yadav ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மராட்டிய தேர்தல்: பாஜகவின் 99 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு