- விழுப்புரம்
- மாவட்டம்
- காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா
- விழுப்புரம் மாவட்டம்
- பொலிஸ் கண்காணிப்பாளர்
- ஸ்ரீநாத
- செங்கல்பட்டு
விழுப்புரம்: கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு மது விலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு வந்த உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதோடு உயிரிழந்தோருக்கு நிவாரண தொகை அறிவித்து இன்று ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டம் சென்றிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு வந்த உடன் அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையின்போது கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் மெத்தனால் எரிசாராயத்தை பயன்படுத்தியதால்தான் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்ட மது விலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்ததோடு, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
The post கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.
