×

கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில், ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இன்று (15.5.2023) செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடத்தினை (Omni Bus Idle Parking) நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படும். கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் முடிவுற்றப் பணிகள் தொடர்பாக இன்று (15.5.2023) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இம்முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை- 7 கிலோமீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை – 18 கிலோமீட்டர் நீளத்திற்கும், நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை – 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் அமையுள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் (Omni Bus Idle Parking) இடம் தேர்வு செய்வதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் முனைவர் அ.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள், போக்குவரத்து ஆணையர் திரு.இல.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள், தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள், காவல் இணை ஆணையாளர் முனைவர்.பா.மூர்த்தி, இ.கா.ப., அவர்கள், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி.உதயா கருணாகரன் அவர்கள்,, தலைமைத் திட்ட அமைப்பாளர்கள், காவல்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தில், ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Klambakkam ,G. S.S. ,TD ,Minister ,P. K.K. ,Segarbabu ,Chennai ,Chief Minister of Tamil Nadu ,Chengalpattu District ,Klambakkattu ,Clambage ,G. S.S. TD ,
× RELATED 2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை...