×

உசிலம்பட்டி அருகே கலைநயத்துடன் கூடிய 9 சிற்பங்கள் செதுக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு..!!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாடக்கோவில் சிற்ப அமைப்புடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜி.மீனாட்சிபுரம் கிராமத்தில் வசிப்பவர்கள் உயிரிழந்த பின்னர் நடுகல் அமைக்கும் நிகழ்வு தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. நடுகல் நடப்படும் இந்த பகுதியை மலைக்காடு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தூய்மை பணிகளை மேற்கொண்டபோது 6 அடி உயரத்தில் மாடக்கோவில் சிற்ப அமைப்புடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடுகல்லின் 3 பகுதிகளிலும் மிக நேர்த்தியாக 9 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தலா ஒரு அடி வீதம் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வியலோடு கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள இந்த நடுகல், 400 ஆண்டுகள் பழமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் மிகவும் வளமையுடன் வாழ்ந்தவரின் நினைவாக இந்த நடுகல் நடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அழகிய சிற்பங்களுடன் கூடிய நடுகல்லை சுத்தம் செய்து அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

The post உசிலம்பட்டி அருகே கலைநயத்துடன் கூடிய 9 சிற்பங்கள் செதுக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Uzilimbatti ,Madurai ,Madako ,Uzilampatti, Madurai district ,Uzilampatti ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி