×

போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு தனியார் பஸ் முனையத்தை கிளாம்பாக்கத்துக்கு மாற்ற நடவடிக்கை?

அண்ணாநகர்: சென்னை கோயம்பேட்டில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் அரசு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்துநிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தினமும் மக்கள் பெரும் இடையூறுகளை சந்தித்து வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை அருகே கிளம்பாக்கத்துக்கு பேருந்து நிலையத்தை மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “நகரின் முக்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை வசதியாக கண்டாலும் புறநகரில் வசிப்பவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வரவேற்றுள்ளனர்.

கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவது போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அதேவேளையில், கிளாம்பாக்கம் மற்றொரு கோயம்பேடாக மாறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்’ என்றனர். இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து முனையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வருகின்ற 18ம் தேதி ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

The post போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு தனியார் பஸ் முனையத்தை கிளாம்பாக்கத்துக்கு மாற்ற நடவடிக்கை? appeared first on Dinakaran.

Tags : Annagar ,Govt. ,Bus ,Station ,Omney Bus Station ,Coimbadu ,Coimbade ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி...