×

ஆந்திர மாநிலத்தில் இரட்டை அடுக்கு விரைவு ரயில் தடம் புரண்டது; பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை..!!

குப்பம்: ஆந்திர மாநிலத்தில் இரட்டை அடுக்கு விரைவு ரயில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குளிர்சாதன வசதியுடன் சென்னையில் இருந்து ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக குப்பம் பகுதிக்கு சென்று கர்நாடகா வரை செல்லக்கூடிய இரட்டை அடுக்கு ரயிலானது குப்பம் அருகே உள்ள பிசாநத்தம் என்ற இடத்தில் தடம் புரண்டுள்ளது. 14 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலானது ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலம் எல்லை பகுதியில் விபத்துக்குள்ளானது. ரயில் பயணிகள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவதிக்குள்ளாகினர்.

அதிஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை. விபத்து குறித்து ரயில்வேத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது; விபத்துக்குள்ளான பெட்டியை மட்டும் கழற்றிவிட்டு மற்ற பெட்டிகள் இணைக்கப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ரயில் அனுப்பப்படும் என்று முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளனர். குப்பம் காவல்துறையினர் மற்றும் பங்கார்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆந்திர மாநிலத்தில் இரட்டை அடுக்கு விரைவு ரயில் தடம் புரண்டது; பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை..!! appeared first on Dinakaran.

Tags : -layer ,AP ,Andhra ,Chennai ,
× RELATED விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில்...