×

மகாராஷ்டிராவில் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் அகோலா நகரில் சர்ச்சைக்குரிய சமூக வலைதளப் பதிவால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறையால் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு போலீசார் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். கல்வீச்சு, துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களால் அங்கு பதற்றமான நிலை நீடிக்கிறது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 45 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அப்பகுதி முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. சட்டவிரோதமாக மக்கள் கூடுவதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் நகரின் நான்கு காவல் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிராவில் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Akola Nagar, Maharashtra ,Dinakaran ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு