×

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூலாங்குறிச்சியில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு-39 வீரர்கள் காயம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 39 வீரர்கள் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் அங்காள பரமேஸ்வரி மற்றும் கணவாய் கருப்பர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், நத்தம், அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் குவிந்தன. மாடுபிடி வீரர்கள் 3 குழுக்களாக பிரித்து அனுமதிக்கப்பட்டனர்.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 7 பேர் பொன்னமராவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூலாங்குறிச்சியில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு-39 வீரர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu- ,Phoolangurichi ,Chitrai festival ,Tiruputhur ,Jallikattu ,Phulangurichi ,Sivagangai ,
× RELATED உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ்...