×

கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றபோது மாயமான சிறுவர்களை தேடும் பணி 2வது நாளாக தீவிரம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றபோது மாயமான 2 சிறுவர்களை தேடும் பணி 2வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள குருகுல பாடசாலையில் பயின்று வரும் 4 மாணவர்கள் நேற்று அதிகாலை 5 மணியளவில் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 4 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டபோது ஒரு மாணவர் மட்டும் உயிருடன் உடனடியாக மீட்கப்பட்டார்.

மீதமுள்ள 3 மாணவர்களும் நீரில் மூழ்கினர். இதையடுத்து நேற்று, மன்னார்குடி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்ற மாணவரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். மேலும் நீரில் காணாமல்போன 2 மாணவர்களை தேடும் பணி 24 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நேற்று முதல் 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றபோது மாயமான சிறுவர்களை தேடும் பணி 2வது நாளாக தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Kudi river ,Srirenangam ,Dinakaran ,
× RELATED சேலம்-திருச்சி நெடுஞ்சாலையில் மாய மானை ராமர் தேடிய பொய்மான்கரடு