×

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற விழுப்புரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் அமரன் (25), கள்ளச்சாராய வியாபாரி. இவர் புதுவை மாநிலத்திலிருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்றுள்ளார். இவர் விற்ற கள்ளச்சாராயத்தை எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் மாலை வாங்கி குடித்துள்ளனர்.கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், 2 இன்ஸ்பெக்டர் மற்றும் 2 உதவி ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரை சந்திக்க விழுப்புரம் முண்டியம்பாக்கம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் முதலமைச்சர் விழுப்புரம் விரைகிறார்.

The post கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற விழுப்புரம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,B.C. ,G.K. ,stalin ,Chennai ,Mukuru Mukuru ,G.K. Stalin ,Viluppuram District ,Marakkanam ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...