×

கோடை விடுமுறையையொட்டி குமரி சுற்றுலாத்தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்!

குமரி : கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த 2 நாட்களில் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கோடைகால சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரை, திற்பரப்பு அருவி பகுதிகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடைகால சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அனைத்து நாட்களிலும் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வருகின்றனர்.மேலும் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

பல மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை கடந்த 2 நாட்களில் மட்டும் 18,000 பேர் சுற்றுலா படகில் சென்று ரசித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கோடை விடுமுறையையொட்டி குமரி சுற்றுலாத்தலங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்! appeared first on Dinakaran.

Tags : Kumari ,Vivekananda Mandapam ,Kanyakumari ,
× RELATED ஓடும் படகில் சுற்றுலா பயணி பலி