×

பொதுமக்கள் அவதி பாம்பு கடித்து மூதாட்டி பலி

 

திருப்பூர்: திருப்பூர், பெருந்தொழுவு ரோடு, அங்காளபரமேஸ்வரி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் மரகதம் (75). இவர் தனது மகள் கோமதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது பாம்பு ஒன்று அவருடைய காலில் கடித்து விட்டதாக கூறி அலறினார்.

அப்போதுஅருகில் இருந்தவர்கள் மரகதத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது செல்லும் வழியிலே சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பொதுமக்கள் அவதி பாம்பு கடித்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Marakatham ,First Road ,Perundhovu Road ,Angalaparameshwari Nagar ,
× RELATED திருப்பூர் அம்மாபாளையத்தில் ரோட்டில்...