×

மினிவேன் மீது தனியார் பேருந்து ேமாதல் டயர் வெடித்ததால் விபரீதம்

 

நத்தம்: நத்தம் அருகே டயர் வெடித்ததால் தனியார் பேருந்து சாலையில் சென்ற மினி வேன் மீது பயங்கரமாக ே மாமதியது. இதில் வேன் டிரைவர் காயமடைந்தார். திண்டுக்கல்லிலிருந்து செந்துறைக்கு தனியார் பேருந்தை செந்துறையை சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் என்பவர் நேற்று ஓட்டிச்சென்றார். நத்தம் அருகே உள்ள மணக்காட்டூர் – மேற்கிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே பால் ஏற்றி வந்து கொண்டிருந்த மின்வேன் மீது மோதியது. அதைத்தொடர்ந்து அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் மினிவேன் டிரைவர் ரஞ்சித்குமாருக்கு வலது கால், கையில் லேசான காயம் ஏற்பட்டது. பேருந்தில் சென்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மினிவேன் மீது தனியார் பேருந்து ேமாதல் டயர் வெடித்ததால் விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Nail ,
× RELATED மலைச்சரிவை தடுத்து மக்களை காக்கும்...