×

தார் சாலை பழுதால் மினி பஸ்கள் இயக்கம் நிறுத்தம்

 

பல்லடம்: பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தில் தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.அவரப்பாளையத்திலிருந்து மீனாம்பாறை மற்றும் வீரபாண்டி வழியாக திருப்பூர் செல்வதற்கு மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த வழித்தடத்தில் வந்துகொண்டிருந்த மினி பஸ் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக வருவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தார் சாலை பழுதால் மினி பஸ்கள் இயக்கம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Avarappalayam, Karaipudur Panchayat ,Palladam Union ,Dinakaran ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது