×

55வது வட்ட திமுக பொருளாளர் பந்தல் எஸ்.ராமு இல்ல காதணி விழா

 

திருச்சி: திருச்சி மத்திய மாவட்டம் 55வது வட்ட திமுக பொருளாளர் பந்தல் ராமு மகன்கள் ஜோதி, பிரகாஷ் ஆகியோரின் காதணிவிழா, பொன்னகர் தொடக்கப்பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தொழிலதிபர் அருண்நேரு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், காஜாமலை விஜய், எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ், கோட்ட தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி கவுன்சிலர்கள் விஜயா ஜெயராஜ், முத்துசெல்வம், புஷ்பராஜ், ராமதாஸ், மஞ்சுளாதேவி, பாலசுப்பிரமணியன், செவந்திலிங்கம், தொமுச, குணசேகரன் மற்றும் 55வது வட்ட கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி, நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

The post 55வது வட்ட திமுக பொருளாளர் பந்தல் எஸ்.ராமு இல்ல காதணி விழா appeared first on Dinakaran.

Tags : 55th ,District ,DMK ,Treasurer ,Pandal S. ,Ramu Illa ,Kathani ,Trichy ,Trichy Central District 55th District ,Panthal Ramu ,Jyoti ,Prakash ,55th District ,Panthal S. Ramu ,
× RELATED தேனி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி நேர்காணல்