×

லாரி மோதி முதியவர் பலி

 

கோவை: கோவை கணபதி கணேஷ் லே அவுட்டை சேர்ந்தவர் இளங்கோ (64). இவர் மொபட்டில் சரவணம்பட்டி விசுவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக இளங்ேகா சென்ற மொபட் மீது மோதியது. இதில், இளங்கோ பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post லாரி மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Elango ,Ganapathi Ganesh Lay Out ,Saravanampatti, Lyusapuram ,Lorry ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு