- பூண்டி மாதா கோயில்
- திருக்காட்டுப்பள்ளி
- பூண்டி மாதா
- தேவாலயத்தில்
- லூர்து
- பூண்டி மாதா தேவாலயம்
- திருக்காட்டுப்பள்ளி
திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் நேற்று காலை பூண்டி மாதா சர்ச்சின் முன்னாள் பங்குத்தந்தை லூர்து சேவியர் மற்றும் இராயப்பர் ஆகியோரின் நினைவு திருப்பலி நடந்தது. குடந்தை ஆயர் அந்தோணிசாமி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி “மரியா -அருளின் ஊற்று” என்ற தலைப்பில் மறையுரையாற்றி ஆசி வழங்கினார். அதைத்தொடர்ந்து பெஸ்கி கலை தொடர்பகம் வழங்கும் கலை நிகழ்ச்சிகளும், குடந்தை ஜேம்ஸ் பாண்டு குழுவினரின் இன்னிசையும் நடந்தது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மின் விளக்குகளாலும், மல்லிகை மலர்களாலும் அலங்கரிக்கபட்ட ஆடம்பர தேர் பவனியை குடந்தை ஆயர் அந்தோனிசாமி புனிதம் செய்து துவக்கி வைத்தார்.
தேர் பவனியை முன்னிட்டு திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, திருச்சி, கும்பகோணம், சென்னை என அனைத்து பகுதிகளுக்கும் குடந்தை போக்குவரத்து கழகத்தின் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது. இன்று 15ம்தேதி காலை 6 மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலி மேற்கொள்கிறார். மாலை 5.15க்கு திருப்பலி, வேண்டுதல் சப்பரம் மற்றும் கொடியிறக்கமும் நடக்கவுள்ளது விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தையுமான சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தைகள், ஆன்மிக தந்தைகள் , தியான இல்ல இயக்குநர் மற்றும் பங்கு மக்கள் வெகு விமர்சியாக செய்து இருந்தனர்.
The post பூண்டி மாதா பேராலயத்தில் ஆடம்பர தேர்பவனி appeared first on Dinakaran.